ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளும்- ஆணையரகத்தின் தீர்வும்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் 03042025 அன்று நடைபெற்ற கூட்டக் குறிப்பு.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மனுவில் கீழ்க்கண்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசை வலியுறுத்தி 0404 2025 அன்று சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் முன்பு பெருந்திரன் முறையீட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் மற்றும் 21042025 முதல் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் 03.04.2025 வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோர்களின் முன்னிலையில் இக்கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சங்க கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோரிக்கையின் விவரமும்- பதிலறிக்கையும்

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோருதல்:-

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரியது தொடர்பாக இவ்வியக்கக கடித நக.எண்.64580/2024/இ4 07.12.2024 நாளிட்ட கடிதம் மூலம் அரசுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு அரசின் உண்டான சலுகைகளை  ஊராட்சி செயலாளருக்கு வழங்க கோருதல்:-

பதிவறை எழுத்தர்களுக்கு இணையான பல்வேறு | அரசின் சலுகைகள் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை அனுமதிப்பது தொடர்பாக 09:122024 நாளிட்ட கடித வழி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

Also Read  ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்

பணியிடை செயலாளர்களின் காலமான ஊராட்சி வாரிசுதாரருக்கு  ஊராட்சி செயலாளர்கள் பதவியில் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க கோருதல்:-

பணியிடை காலமான ஊராட்சி செயலாளர்களின் வாரிசுதாரருக்கு ஊராட்சி செயலாளர்கள் பதவியில் கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவது | தொடர்பாக கருத்துரு அரசுக்கு அனுப்ப நடவடிக்கையில் உள்ளது.

ஊராட்சி செயலாளர்களுக்கு ஊழியர்களுக்கு அரசு அனுமதிக்கப்படும் மருத்துவ விடுப்பு வழங்க கோருதல்:-

அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் மருத்துவ விடுப்பு, ஊராட்சி செயலாளர்களுக்கு |அனுமதிப்பது தொடர்பாக கருத்துரு அரசுக்கு அனுப்ப நடவடிக்கையில் உள்ளது.

திருமணமான பெண் ஊராட்சி செயலர்களுக்கு மகப்பேறு விடுப்பு இதர மாநில அரசு பெண் ஊழியர்களைப் போன்று 365 நாட்கள் வரை நீட்டித்து அரசாணை (நிலை) எண். 113 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையிடப்பட்டுள்ளது. நாள். 7.9.2021

மேலும், கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வருமாறும், அவற்றை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதால் தேவையற்ற போராட்டங்களை தவிர்க்குமாறும் மற்றும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அந்த கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.