ஊரக வளர்ச்சி துறையின் ஆணிவேர் ஊராட்சி செயலாளர்கள் – முதன்மை செயலாளர் பாராட்டு

சென்னை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்….

ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,மதிப்புமிகு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனருடன் (03.04.2025)மாலை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மன மகிழ்வுடன் நடைபெற்றது.. மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகள் மனநிறைவை தந்துள்ளது.

ஊராட்சி செயலர்கள் இத்துறையின் ஆணிவேர்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழகத்தில் ஊராட்சி செயலர்களின் உழைப்பை பாராட்டுவதாக சொல்லி மிகுந்த அங்கீகாரத்தை வழங்கினார்.40 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மிக மன நிறைவை தந்தது.

முன்னதாக, எங்கள் துறையின் ஆணையரோடு நடந்த பேச்சு வார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஆணையர் அவர்களின் பல ஆணைகள் ஊரக வளர்ச்சி துறையின் பல வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பணிக்காலம் ஊராட்சி செயலாளர்கள் உட்டபட அனைத்து ஊழியர்களுக்கும் பொற்காலம் என நம்மிடம் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.

Also Read  புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்