ஊராட்சிகள்
கரையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை என ஊரக வளர்ச்சித் துறை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நகரமயமாக்கல் என்ற நிலையால் ஊரக வளர்ச்சித்துறையே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என எழுதி இருந்தோம்.
ஆணையர் அவர்கள் அதிகாரிகளோடு நடத்திய ஆலோசனையில், பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிப்பது, பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரிப்பது பற்றி கூறி உள்ளார்.
அந்த நடவடிக்கையை விரைந்து எடுத்து, வார்டு வரன்முறைக்கு முன்பே ஊராட்சிகளை வரன்முறை படுத்திட வேண்டும்..
அப்படி நடந்தால், பழைய எண்ணிக்கையை தாண்டி ஊராட்சிகளின் கணக்கு உயரும். அதுவே,ஊரக வளர்ச்சித் துறைக்கு நல்லது.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பெரிய ஊராட்சிகளை பிரிக்கும் பணியை முடித்து ஊரக வளர்ச்சித்துறை காத்திட வேண்டும்.
இணைப்பு செய்தி:- மிகச் சிறிய ஊராட்சிகளை அருகில் உள்ள ஊராட்சியோடு இணைக்கும் பணியும் மேற்கொள்ள உள்ளது.