மதுரை
மாவட்டம் கம்பூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் ஊராட்சி செயலாளர் ரூபா மீது அதே ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைகாவலர் ஒருவர் சாதிரீதியாக துன்புறுத்த பட்டதாக புகார் தெரிவித்தார்.
சமூகநீதி அமைச்சர் வன்னியரசு இந்த விசயத்தில் தலையிட்டு ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்ய வைத்து,அவர் மீது பிசிஆர் வழக்கும் பதிய உத்திரவிட்டாராம். அவரின் ஆணையை ஏற்று அனைத்தும் நடந்தேறியது.
திருப்பம்
காவல்துறையின் விசாரணையில் தூய்மை காவலர் கொடுத்த புகாரில. உண்மை இல்லை என கண்டறிந்து பிசிஆர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. ஆதாரம் இல்லா குற்றச்சாட்டை அவசரகதியில் கையாண்ட அமைச்சர் வன்னியரசு மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சாதிய பிரச்சனையாக உருவாகுவதற்கு அமைச்சரே காரணமாக உள்ளதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆரம்பத்திலேயே இந்த விசயத்தை முடிவுக்கு கொண்டு வருவது முதல்வரின் கடமை. இல்லையென்றால், அமைதியாக இருக்கும் தென்மாவட்டங்களில் சாதிய நெருப்பு பற்றி எரியும் சூழ்நிலை உருவாகும்..
முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?































