திடுக்கிடும் செய்தியா ஒற்றரே..
ஆமாம்….ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் கூடுதல் இயக்குநர் ஒருவர் ஊராட்சிகளுக்கு சில பொருட்களை சப்ளை செய்வதற்கு புதிய கம்பெனியை ஆரம்பிக்கிறாராம்.
ஆரம்பித்துவிட்டாரா..இனிமேல் ஆரம்பிக்க போகிறாரா ஒற்றரே..
ஆரம்பிக்க போவதாகவே செய்தி வருகிறது.அந்த கூடுதல் இயக்குநர் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதாகவும் கூறுகிறார்கள். அவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த செய்தியை பெரிதாக்க முயன்று வருகிறார்களாம்.
ஓய்வு பெற்ற பிறகு நிறுவனம் ஆரம்பிப்பதில் தவறு இல்லையே ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஓய்வு பெற்ற பிறகு ஆரம்பித்தால் தவறு இல்லை. பணியில் இருக்கும் அதனை செய்தால் அது அதிகார மீறல். தொடர்ந்து செய்தி சேகரித்து வருகிறேன். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும்.முக்கிய தகவல் கிடைத்தால் உடனே கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.


























