கூட்டம்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.02.26 அன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் சுதாகர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில /மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கூட்டத்தில் பின்வரும் *தீர்மானங்கள்* நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி மாறுதலில் பாதிப்படைத்துள்ள பணியாளர்களுக்கு மீண்டும் பணி மாறுதல் வழங்கிட வேண்டும்.
2. அரசாணை எண்.127-ன்படி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் *கலந்தாய்வின்* மூலம் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு அமைச்சுப் பணி விதிகளுக்கு உட்பட்டு பணி மூப்பு பட்டியல் சரியான முறையில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
4. *ஒரு* மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அரசு விதிகளுக்கு முரணாக பணியிடமே இல்லாமல் வழங்கப்பட்டுள்ள மாற்று பணியினை ரத்து செய்ய வேண்டும் .
5. நடுநிலையுடன் செயல்படாமல் ஒருதலைப் பட்சமாக செயல்படும் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிப் பிரிவு *அலுவலக மேலாளரை* பணி மாறுதல் செய்ய வேண்டும்.
6. ஊராட்சி செயலர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக பணி நீக்கம் மற்றும் ஒன்றிய பணி மாறுதலை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பழைய பணியிடத்திலே பணிபுரிய ஆணை வழங்க வேண்டும் .
TNRDPUEA சிவகங்கை மாவட்டம் மையம்































