தையூர் தொழிலாளர்கள் கட்டடம்

  1. காஞ்சிபுரம் மாவட்டம்

தையூரில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு கட்டடம், தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டு உள்ளது.

திருப்போரூர் ஒன்றியம், தையூர் கிராமத்தில், தொழிலாளர்கள் நலனுக்காக, 2016ல், 1 ஏக்கர் பரப்பில், துாங்கும் ஓய்வு அறை அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம், 13 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.

இங்கு, 1,000 பேர் தங்கும் வசதியுடன் கூடிய படுக்கை அறை, கழிப்பறை, உணவகம், ஏ.டி.எம்., வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்கட்டடம், 2018ல் திறக்கப்பட்டாலும், பயன்பாட்டிற்கு வரவில்லை.

தற்போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனிமைப் படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டு உள்ளது.

இங்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடுக்கு சென்று வந்த, வியாபாரிகளை தனிமைப்படுத்தி, கொரோனா இருக்கிறதா என, பரிசோதனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினத்தில் இருந்து, 300க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், கொரோனா பாதிப்பு உள்ளோரை மட்டும், மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர்.

மற்றவர்கள், 14 நாட்களுக்கு பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

 

Also Read  வேப்பங்குப்பம் ஊராட்சி - வேலூர் மாவட்டம்