காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.

அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம்

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சி இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. பனிரெண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இதே ஒன்றியத்தில் உள்ள அய்யப்பந்தாங்கல் ஊராட்சியே இதற்கு முன் மிகப்பெரிய ஊராட்சியாக இருந்துள்ளது. பல பகுதிகள் மாநகராட்சியில் இணைந்த பிறகு, இப்போது இந்த மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஊராட்சியாக உள்ளது.

Also Read  திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?