யாருக்கு அதிகாரம் – AD / DPM

தனியார் வசம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அதிகாரியாக உதவி இயக்குநர்(ஊராட்சி) உச்சபட்ச அதிகார மையம்.

ஆனால்…ஊரக வளர்ச்சித் துறை படிப்படியாக கணிணி மயமாக மாறி வந்ததால், ஒப்பந்த பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறையில் உள் நுழைந்தனர்.

ஏற்கனவே,ஊரக வளர்ச்சி துறையில் பணியில் உள்ளவர்களுக்கு கணிணி பயிற்சி அளிப்பது காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், கணிணி படிப்பை முடித்தவர்களை ஒப்பந்த பணியாளர்களாக அரசு நியமித்தது.

மாவட்ட அளவில் DPM ( மாவட்ட திட்ட மேலாளர்)என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதுபோல,ஒன்றிய அளவிலும் கணிணி இயக்குநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

பல மாவட்டங்களில் உதவி இயக்குநரை விட அதிகாரம் செலுத்துவர்களாக இந்த கணிணி பொறியாளர்கள் மாறிவிட்ட நிலையை காண முடிகிறது.

தங்களுக்கு உயர் அதிகாரி மாநில மையத்தில் உள்ளவர் மட்டுமே என்ற எண்ணத்தில் செயல்பட்டு, உதவி இயக்குநர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லையாம்.

தேர்வில் வென்று நேரடியாக உதவி இயக்குநராக வந்தவர்களில் 70 சதவீதத்தினரின் உத்தரவை மதிக்கும் இவர்கள், பதவி உயர்வில் வந்த உதவி இயக்குநர்கள் சொல்வதை கேட்பதே இல்லை.

இவர்களின் நடவடிக்கைகளை மாவட்டவாரியாக கண்காணித்து தொடர்ந்து செய்தி வெளியிட உள்ளோம்.தன் நிலை மறந்து யார் செயல்பட்டாலும், மக்களுக்கு முன் அவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுவது நமது கடமை

Also Read  ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் கடிதம் - ஒற்றர் ஓலை