பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு முறையான புகார் மனுவை அனுப்பி வைத்தார்.
அந்த புகாரின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சரிவர விசாரணையை செய்யவில்லை. ஊராட்சி தலைவரின் பதவி காலம் முடிந்து, தனி அலுவலர் காலமும் நடந்து வருகிறது.
பல லட்ச ரூபாய் எந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது என தெரியாது சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஒன்றியம்,மாவட்டம்,மாநில தலைமை என கை காட்டியே காலத்தை கழித்து விட்டனர்.
இறுதியாக நமக்கு கிடைத்த தகவல், இதே சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள பெரும்பச்சேரி ஊராட்சிக்கு அந்த பணம் சென்றுள்ளதாக தெரிகிறது.
யார் குற்றம்
ஒரு தடவை அல்ல, சில வருடங்களாக வேறொரு ஊராட்சி கணக்கிற்கு பணம் சென்றுள்ளது. அப்படி தவறாக வரவு வைக்கப்பட்ட மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள பெரும்பச்சேரி ஊராட்சி நிர்வாகம் உண்மையை மறைத்தது ஏன்?
ஆண்டு இறுதியில் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் அமைப்பும் தவறை கண்டுப்பிடிக்கவில்லையா?
சம்மந்தப்பட்ட மானமதுரை ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சி செயலாளர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பணம் எப்படி வந்தது என்ற உண்மை கண்டறியவில்லையா?
சம்மந்தப்பட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சி தலைவர் புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் இரண்டு ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கை என்ன?
சம்மந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் செலுத்திய பணம்,அந்த ஊராட்சிக்கு பயன்பெறாமல் இரண்டாண்டுக்கும் மேலாக வீணாக்கப்பட்டுள்ளதற்கு யார் பொறுப்பு?
இந்த பணம் சம்மந்தப்பட்ட செய்தியை ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தோம்.ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நியாயமான தீர்வை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்கள் தான் எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெரும்பச்சேரி ஊராட்சி(இளையான்குடி) பொதுமக்கள்.