ஊராட்சிகள் இணைப்பு – ஊழியர்கள் நிலை என்ன?

ஊராட்சிகள்

தமிழ்நாட்டில் 500 மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.

அப்படி இணைப்பு நடந்தால்,அந்த ஊராட்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேறொரு துறையின் கீழ் இணைக்கப்படுவார்கள்.

ஊராட்சி செயலாளர்கள்

இணைக்கப்படும் 500 மேற்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்படுவர். அவர்களுக்கு அந்தந்த துறையின் சார்பாக ஊழியமும், பிற சலுகைகளும் வழங்கப்படும். குறிப்பாக, அவர்களுக்கு சம்பளம் என்பது அரசு கருவூலம் சார்பாக வழங்கப்படும்.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறையில் தொடர்ந்து பணியாற்ற உள்ள ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கருவூல சம்பளம் என்பதை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் என இருவரும் மனது வைத்தால் இந்த கோரிக்கை வெற்றி அடையும்.ஊராட்சி செயலாளர்களின்  வாழ்வில் ஒளி பிறக்கும்.

Also Read  தயிரில் இவ்வளவு நன்மையா...