அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை

என்ன விசயம் ஒற்றரே…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.

என்ன சொல்றீங்க ஒற்றரே..

ஆமாம் தலைவா…ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த அராஜக உத்தரவிற்கு நீதி மன்றத்தில் உடனடியாக தடைபெற்று பெற்றவிட்டார்களாம்.

பிரச்சனை நீதிமன்றம் சென்றுவிட்டதே ஒற்றரே

பிடிஓ குமாரை நீதிமன்றம் கூட.. கட்டுப்படுத்த முடியாதாம். நீதி மன்ற உத்தரவை காலில் போட்டு மிதிப்பதுபோல, இடமாறுதல் உள்ளான ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றும் நான்கு ஊராட்சிகளுக்கு வேறொரு பூட்டை வைத்து பூட்டிவிட்டார் தலைவா..

ஆணையர் உத்தரவு,நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மமதையை எப்படி எடுத்துக்கொ்வது என தெரியவில்லை ஒற்றரே..

இவரை போன்றவர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யவேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  குழமமூர் ஊராட்சி -அரியலூர் மாவட்டம்