மே மாதம் உள்ளாட்சி தேர்தல்?

தேர்தல்

டிசம்பர் மாதத்தோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகுதான் உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் என செய்தி உலா வந்தது.

சில தினங்களாக பிப்ரவரியில் தேர்தல் என தினமலர் நாளிதழ் தொடங்கி, பல இணைய செய்தி தளங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எதுதான் உண்மை என பத்திரிகை நண்பர்களிடமும் , சில அதிகாரிகளிடமும் பேசினோம். அப்போது,வரும் சட்டட மன்ற கூட்டத்தில் ஆறு மாதம் அதிகாரிகளின் ஆளுமையில் உள்ளாட்சி என மசோதா தாக்கல் ஆகும்.

அதற்குள் கூட்டணி கட்சிகளிடம் சீட்டு பகிர்வு பற்றி பேசி முடிவெடுக்கப்படும். அதே காலகட்டத்தில் வார்டு வரன்முறைகள், ஊராட்சி இணைப்பு போன்ற காரியங்களை நடத்தி முடிக்கப்படும்.

பள்ளிகளின் விடுமுறை காலமான மே மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, 90 சதவீ்தத்திற்கும் மேற்பட்ட பதவிகளை ஆளும் கூட்டணி வெற்றி கொள்ள செய்வது திட்டமாக இருக்கிறது. அந்த உள்ளாட்சி பிரதிநிகளின் பங்களிப்பால் மட்டுமே சட்டமன்ற தேர்தலை சந்திப்பதே சரியாக இருக்கும் என்பதே பெரும்பான்மை கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளதாம்.

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்தியை புறம்தள்ள முடியாது.

Also Read  ஒற்றை மனிதனை நம்பும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம்