தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில் உள்ளவர்கள் அரசியல் பிரமுகர்களின் மனசாட்சியாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் சொல்வதை மட்டுமே செய்து வருவதாகவும் பலமுறை சங்கத்தின் மூலம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் அதை பரிசளிப்பதே இல்லை என்றும் அம்மாவட்டத்தில் அரசியல் கட்சியின் துணைகொண்டு ஊராட்சி செயலர்களை பலி வாங்கி வருகின்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ரேவதி திரு குமார் ஆகியோர் மீது பல்வேறு நிதி சார்ந்த முறைகேடு மனுகள் கொடுத்தும் அதனை விசாரிக்காமல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளையும் மாவட்ட நிர்வாகிகளையும் பழி வாங்கும் நோக்கில் அர்த்தமற்ற அற்ப விஷயங்களுக்காக சஸ்பென்ஷன் செய்வதும் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தாமல் செய்யும் போக்கை எவ்வளவோ முறைகள் மாற்றிக்கொள்ள கேட்டும் அதனைபற்றியே கண்டுகொள்ளாத நிலையை கண்டித்தும் மாநில அளவில் எருமை மாடுகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த முறை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது மாவட்ட நிர்வாகம் வசம் சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட எந்தவித புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாறாக ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதனால் இப் போராட்டத்தை மாநில அளவில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு கட்சி நிர்வாகி உடன் மிக நெருக்கமாக இருந்த காட்சி பத்திரிகைகளில் வெளியான பின்னரும் அவர் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் இதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்..இப்போராட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை இல்லாத புதிய வடிவிலான போராட்டம் என்பதால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து வருகிறது

































