அரியலூர் மாவட்டத்தில் அடாவடியாக இடமாறுதல் – ஒற்றர் ஓலை

என்ன செய்தி ஒற்றரே…

ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலை பற்றிய செய்திதான் தலைவா…

எந்த ஒன்றியத்தில் ஒற்றரே…

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள ரவி என்பவரின் அடாவடிக்கு அளவே இல்லையாம் தலைவா..

அரசியல் அழுத்தம் உண்டா ஒற்றரே..

அரசியல் அழுத்தமும் உண்டு. தனது நிலைப்பாட்டையும் சேர்த்து ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்திற்கு இடமாறுதல் செய்கிறாராம் தலைவா.விரைவில் பெண் ஊராட்சி செயலாளரை இடமாறுதல் செய்து உத்தரவு போட உள்ளாராம்.

பக்கத்து மாவட்டமான பெரம்பலூரில் இந்த நிலை இல்லையே ஒற்றரே…

அந்த மாவட்ட ஆட்சியர் அனுப்பிய சுற்றறிக்கையால் இடமாறுதல் நடப்பதில்லை.அதே போல ஒரு உத்தரவு சிவகங்கை மாவட்டத்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது தலைவா…

மிக சிறப்பான திட்ட இயக்குநர் உள்ள அரியலூரில் இந்த நிலையா ஒற்றரே…

மிகச் சரியாக சொன்னீர்கள் தலைவா..இந்த விடயத்தில் திட்ட இயக்குநர் சிவராமன் அவர்கள் நிலையான முடிவை உனடியாக எடுப்பார் என ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் உளமார நினைக்கின்றனர் என சொல்லி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  குருவாடிபட்டி ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்