நமக்கு உளவு சொல்வது யார்? யார்?? – ஒற்றர் ஓலை

நமது செய்தியால் பிரச்சனையா ஒற்றரே…

ஆமாம் தலைவா…நாம் வெளியிடும் செய்தியை குறிப்பிட்ட சிலர் நமக்கு அளிப்பதாக ஒரு மாவட்டத்தில் கலகக் குரல் கிளம்பி உள்ளது.நமக்கு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் நண்பர்களே..

பிறகு என்ன பிரச்சனை ஒற்றரே…

தலைவா…குறிப்பிட்ட மாவட்ட செய்தியால் குழப்பம் நிகழ்கிறது. அனைத்து சங்கத்திலும் நமக்கு நண்பர்கள் உண்டு.சங்கத்தினர் பாதிக்கப்பட்டால் அவருக்காக துணை நிற்க வேண்டும். தவறு செய்யும் நிர்வாகியை காப்பாற்ற போராடுவது எந்த சங்கத்திற்கும் மனித தர்மம் ஆகாது.

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சரிதானே ஒற்றரே…

அனைத்து மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து ஊழியர்களும் நமக்கு நண்பர்களே. தவறு நடந்தால் அதை பற்றி செய்தி வெளியிடுவது பத்திரிகை தர்மம். அதற்காக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் எண்ணத்துடனே செய்தியை வெளியிடுகிறோம் தலைவா…

தவறான செய்தி வெளியானால் அதற்கான மறுப்பும் வருத்தமும் வெளியிடுவதும் பத்திரிகை தர்மம் ஒற்றரே…

சரியாக சொன்னீர்கள் தலைவா…. நமக்கு தகவல்களை அனைத்து நிலை பணியாளர்களும் தருகிறார்கள். அவர்களின் ஆதங்கத்தை தான் நாம் பேசுகிறோம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் - ஒற்றர் ஓலை