16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு

திருச்சியில் மாநாடு

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது.

1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும்

2.01.06.2009 முதல் அரசாணை எண் 234ன்படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தைத் தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

3. மேல்நிலைநீர்தேக்கதொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 15000 (பதினைந்தாயிரம்) வழங்கிட வேண்டும்

4. ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்

5. MGNREGS திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட அரசாணை எண் : 37 வெளியிட்ட பின்னரும் இதுநாள்வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

6. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார / மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார / மாவட்ட அளவில் பணிநிரந்தரம் செய்திட வேண்டும்

Also Read  ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் சார்பாக சென்னையில் பேரணி

7.03 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மை பணியாளர்களை சிறப்புகாலமுறை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களை காலமுறை ஊதிய சுட்டுக்கும் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்கிட வேண்டும்

8. கிராம சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் ரூ.10000 (பத்தாயிரம்) ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும்

9. தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும்போது ரூ.500000 (ஐந்து லட்சம்) வழங்கிட வேண்டும்

10.மக்கள் நல பணியாளர்களுக்கு கடந்த 19.08.2014ம் தேதியன்று மாண்பமை சென்னை உயர் நிதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும்

11.ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை / தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்

12.MGNREGS கணினி உதவியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அமல்படுத்தி NHIS, GIS, PF ஆகியவை பிடித்தம் செய்ய வேண்டும்

13:10 ஆண்டுகள் பணிமுடிந்த வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு துணைவட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிைைணப்பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்

14.மாதம் ரூ.250 (இருநூற்று ஐம்பது) ஊதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களை கணக்கெடுப்பு செய்து பணிவரன்முறை செய்திட வேண்டும்

Also Read  ஆதனூர் ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்

15.மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000 பணிக்கொடை ரூ. 100000(ஒரு லட்சம்) வழங்கிட வேண்டும்

16.கிராம ஊராட்சியில் பணிபுரிந்துவரும் ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், தூய்மைகாவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், சுகாதார ஊக்குநர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி அதனை பிரதிமாதம் கடைசி வேலைநாளில் பெறும் வகையில் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலர் கையொப்பமிட வழிவகை செய்திட வேண்டும்.