இடமாறுதல்
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம்) பணியாற்றும் நாகராஜ், தனபதி இருவரும் முறையே, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மகளிர் திட்ட இயக்குநராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.