ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் – சிகரம் வைத்த சிவகங்கை

அரவிந்த்
அரவிந்த்

ஆணையர் ஆணை

ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் ஆணையை முழுமை பெறச் செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

கலந்தாய்வுடன் இடமாறுதல் என பல்வகை போராட்டங்களுக்கு பிறகு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வரலாற்று உத்தரவை வெளியிட்டார்.

ஆனால், கண்துடைப்பாக கலந்தாய்வுடன் இடமாறுதல் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். ஆனால், விருதுநகர் மாவட்டத்தை தவிர எந்த மாவட்டமும் அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை.

அதிகார இடமாறுதல்

அதைவிட அரசியல்வாதிகள்,ஆளும் வர்க்கத்தினர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை ஒன்றியத்திற்குள் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பயன்படுத்தி நினைத்த நேரத்திற்கு இடமாறுதல் செய்வது தமிழகம் முழுவதும் நடந்தேறி வருகிறது.

அதற்கு முடிவு கட்டுவதற்கான முதல் விதையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சுற்றரிக்கையை அனுப்பினார்.

அதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களுக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் நன்றிகள்.

இதனை போல, பிற மாவட்ட சங்க நிர்வாகிகள் திட்ட இயக்குநர்களை சந்தித்து சுற்றறிக்கை வெளியிடும் முயற்சிகளை செய்வார்கள் என நம்புகிறோம்.

Also Read  பெருந்துறைப்பட்டு ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்