மடப்புரம் ஊராட்சி /Madapuram Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மடப்புரம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2496 ஆகும். தற்போதைய நிலவரப்படி 2695 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 1505 பேரும் ஆண்கள் 1491 பேரும் உள்ளனர். ஒருகைபனை குடியிருப்பு மடப்புரம் ஊராட்டிக்குள் அடங்கி இருக்கிறது. அத்துடன் வடகரை, கலுங்குபட்டி, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளும் மடப்புரம் ஊராட்சிக்குள் அடக்கம். இங்குள்ள மடப்புரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.