சிவகங்கை
மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றி பணி மாறுதலில் சென்றுள்ள ஆஷா அஜித் இஆப அவர்கள் எழுதிய நன்றி கடிதம் ஒன்றை கண்டேன்.
உண்மையில் மாவட்ட ஆட்சியரே அதை எழுதி இருந்தால், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாக இதய நன்றிகளை சமர்பிப்போம்.
படித்த இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது ஆங்கிலத்தில் உரையாடும் கேடுகெட்ட நிலையில்,பிறப்பால் மலையாளியான அவர் ,இந்திய ஆட்சி பணியாளராக பணிபுரிந்த தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழில் நன்றி மடல் எழுதிய ஆட்சியர் ஆஷா அஜித் அவர்களுக்கு மீண்டும் இதய நன்றிகள்.
நன்றி மடல் 1
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக நான் பணியாற்றிய காலத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எனது துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத்தெரிவித்து, எனது பயணத்தில் என்னுடன் பயணித்த அன்பார்ந்த மாணவச்செல்வங்களுக்கும் எனது சிறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நான் கொண்டுசெல்லும் அருமையான நினைவுகளுக்காக சிவகங்கைக்கு நன்றி!
தங்கள் உண்மையுள்ள,