தேர்தல் பணிகள் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அறிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் மாநில மைய அறிவிப்பு

ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சி அளவில் பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வரும் நிலையிலும் கடந்த 20 தினங்களுக்கு மேலாக தேர்தல் தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்தி வந்தார்கள்..அதனையும் நாம் முடித்துக் கொடுத்தோம்..

அப்பணிகளுக்கு வாலன்டியர்ஸ் என்று சொன்னார்கள்..கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையில் கைப்பணங்களை போட்டு வாலண்டியர்ஸ் நியமித்து அந்த பணிகளை முடித்துக் கொடுத்தோம்*

ஆனால் தமிழ்நாடு முழுவதும் இதுவரை அதற்கான தொகை ஏதும் வழங்கியதாக பதிவுகள் இல்லை..இது முடிவதற்குள்ளாக தற்பொழுது வேளாண்மை உற்பத்தி துறை முதன்மைச் செயலர் அவர்கள் DCS என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்கும் பணிகளில் வாலண்டியர்ஸ்களை ஊராட்சி செயலர்கள் மூலம் நியமித்து உடனடியாக அந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கடிதம் இணையத்தில் சுற்றி வருகிறது..

இது தொடர்பாக நம்முடைய துறையின் ஆணையர் இன்று மாலை அனைத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் மற்றும் இணை இயக்குனர்களுக்கு காணொளி வழியே ஒரு கூட்டம் நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்க உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.. இதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மிக வருத்தமுடன் பார்க்கிறது.

Also Read  அரசியல் அதிகாரம் பக்கம் திரும்புமா லஞ்ச ஒழிப்புத் துறை

தமிழகத்தில் பெரும்பான்மையாக ஊராட்சிகளில் தனி அலுவலர் காலம் நடைமுறையில் உள்ள நிலையில் ஊராட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பணியாளரான ஊராட்சி செயலர்களை பிற துறை பணிகளை முழுமையாக ஈடுபடுத்தும் நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது..

இது ஏன் என்று விளங்கவில்லை!.

வருவாய்த் துறையில் பல அலுவலர்கள் இருந்தும் வேளாண் துறையில் பல அலுவலர்கள் இருந்தும் இப்பணிகளை அவர்கள் வசம் ஒப்படைக்காமல் ஊராட்சி செயலர்கள் வசம் ஒப்படைத்து தற்பொழுது ஊராட்சி வாரியாக பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்..*

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது ஊரக வளர்ச்சி பிரிவு நிர்வாகங்களை குறிப்பாக ஊராட்சி செயலர்களை எடுப்பார் கை பிள்ளையாக தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருவதாகவே என்ன முடிகிறது.

எனவே இந்த சர்வேவை பொருத்தமட்டில் நமது துறையின் அறிவுறுத்தல்கள் எப்படி செல்கிறது என்பதை பொறுத்தமட்டில் பணியை முழுமையாக புறக்கணிக்க மாநில மையம் உரிய அறிவிப்பை வெளியிடும் என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
மாநில மையம்