ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி

ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி /Andarkottaram Panchayat

தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆண்டார்கொட்டாரம். இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4182 ஆகும். தற்போதைய நிலவரப்படி 4820 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 2466 பேரும், ஆண்கள் 2416 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்டு காத்தவனேந்தல், பெரியபூலாங்குளம், களஞ்சியம் நகர், குறிஞ்சி நகர், ஆதிசக்தி நகர், அய்யனார் நகர், சந்திரலேகாநகர், கருப்பபிள்ளையேந்தல், எல்.பூலாங்குளம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.

Also Read  இளமனூர் ஊராட்சி