அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?

தனி அலுவலர்

ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உதவி இயக்குநர்கள்(ஊராட்சி,தணிக்கை) மற்றும் திட்ட இயக்குநர் வரை தத்தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

ஓடிபி மாற்றம்

உள்ளாட்சிகளின் பணப்பரிமாற்றம் என்பது மக்கள் பிரதிநிதிகளின் கைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி கொண்டு நடைபெற்று வந்தது. இப்போது அதிகார மாற்றம் நடந்துள்ளதால், அதிகாரிகளின் கைபேசி எண்ணிற்கு ஓடிபி வருவதற்கான ஆரம்பகட்ட பணி  நடைபெற்று வருகிறது.

மாநில அலுவலகத்தில் அடிப்படை பணி முடிந்த பிறகே ஓடிபி முழுமையாக மாறும்.

ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

 

பா.பொன்னையா இஆப
பா.பொன்னையா இஆப

ஒத்திவைக்கப்படுமா?

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தனி அலுவலர் பொறுப்பு என்பது கூடுதல் சுமையாகவே இருக்கும்.

இந்த நிலையில் வரும் 10ம் தேதி உதவி இயக்குநர்களுடன் சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார மாற்றம் செய்யும் பணியை முழுமையாக முடிப்பதற்கு உதவி இயக்குநர்கள் களத்தில் இருக்கவேண்டியது உள்ளது.

பொங்கல் பண்டிகையும் நெருங்கி வரும் வேளையில், 10ம் தேதி ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் ளன கூறி உள்ளனர்.

ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?

Also Read  நாகையநல்லூர் ஊராட்சி - திருச்சி மாவட்டம்