7 ம் ஆண்டை நோக்கி பயணம்
2020 ஜனவரி 5 முதல் நமது tnpanchayat.com இணைய தளத்தின் பயணம் ஆரம்பம் ஆனது.
இதுவரை எந்த தடை வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெரிந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்னும் 5 மாதத்தில்(ஜனவரி 2026) ஆறு ஆண்டுகள் கடந்து, ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம்.
உள்ளாட்சி செய்திகளை மட்டுமே பெரும்பான்மையாக வழங்கும் ஒரே தமிழ் செய்தி தளம் நாம் மட்டுமே.
சில செய்திகள் பலரை கோபப்படுத்தியது.சிலரை வருத்தத்திற்கு உள்ளாக்கியது.உள்ளாட்சி அமைப்பில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே நமது செயல்பாடு ஆகும். தனிப்பட்ட நபர்களின் உள் வாழ்க்கைக்கு நுழைவது கிடையாது.
மக்கள் பணிக்கு வந்தவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும், தட்டிக்கேட்பதும் ஊடகத்தின் கடமை ஆகும்.
ஆகவே…வரும் ஜனவரி மாதத்தில் நமது இணைய செய்தி தளம் சார்பாக சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளோம்.
விரைவில், விரிவான விவரங்களை தெரிவிக்க உள்ளோம்.
நமது செய்தி இணைய தளத்தில் 2020 ஜனவரி 5ம் தேதி வந்த முதல் செய்தி
https://tnpanchayat.com/best-wishes-all/