யார் ஒற்றரே…
விருதுநகர், சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர்களாக புதிதாக பதவி ஏற்றுள்ள இருவரும் பணியில் சேர்ந்த நாள் முதலே களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்களாம் தலைவா…
விளக்கமாக கூறுங்க ஒற்றரே…
விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குநர் கேசவதாசன் தினசரி காலை வேளையில் ஊராட்சிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே அலுவலகம் செல்கிறாராம் தலைவா..
பணியில. சேர்ந்தே சில நாட்கள் தானே ஆகிறது ஒற்றரே…
உண்மைதான் தலைவா…உதவி இயக்குநராக சிவகங்கையில் இருந்த போதே இதே வழக்கத்தைத் தான் வைத்து இருந்தாராம். அதே பாணியை விருதுநகரிலும் தொடர்வதாக தகவல்.
சிவகங்கை ஊராட்சி செயலாளர் ஒருவர் என்னிடமும் இன்று பேசினார் ஒற்றரே…
ஆமாம் தலைவா…புதிய திட்ட இயக்குநர் அரவிந்த இன்று சிவகங்கை ஒன்றியத்தில் சில ஊராட்சிகளில் கள ஆய்வில் ஈடுபட்டாராம். ஒரு ஊராட்சி அலுவகத்தில் கழிவறையின் நிலையை பார்த்து கொதித்து விட்டாராம்.
ஊராட்சி செயலாளரின் பாடு திண்டாட்டமாக ஆகிவிட்டதா ஒற்றரே..
ஊராட்சி செயலாளரை கண்டித்து உள்ளாராம்.தவறுகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை உண்டு. தினசரி ஆய்வு தொடருமாம். மறுநாள் எந்த ஒன்றியத்தில் எந்ந ஊராட்சிகள் என்பதை காலையில் தான் முடிவு எடுப்பாராம்.சிவகங்கை மாவட்டம் பரபரப்பாக உள்ளது தலைவா.
திடீரென ஆய்வு நடந்தால் மட்டுமே சரியாக இருக்கும் ஒற்றரே…
உண்மை தான் தலைவா…இந்த கள ஆய்வு பணி எந்நாளும் தொடர வேண்டும்.ஆரம்பம் அமர்களம். இது கடைசி வரை தொடர வேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.































