மூன்றாண்டில் அடியெடுத்து வைத்த ஆணையர் – ஒற்றர் ஓலை

அதிகாரியின் பதவி காலம் என்பது சாதாரண நிகழ்வு தானே ஒற்றரே…

அதிகாரியின் பதவி காலம் கழிவது என்பது சாதாரணம் தான் தலைவா..அந்த துறையில் அவர் செய்த செயல்களின் தன்மைகளை பற்றி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நம்மிடம் சொன்னது தான் பிரமிக்க வைத்தது.

அப்படி என்ன ஒற்றரே…

கடைநிலை பணியாளர்கள் முதல் துறையின் கூடுதல் இயக்குநர் வரை அனைவரும் நம்பிடம் ஆணையரை பற்றி பாராட்டி தீர்த்தனர் தலைவா.ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் உடன் இடமாறுதல்,அதிகாரிகளின் பதவி உயர்வில் உள்ள தடைகளை தகர்த்து எறிந்தது என பட்டியல் போடுகின்றனர்.

நமது இணைய தளத்திலும் ஏற்கனவே இரண்டாண்டு செயல்கள் என தனி செய்தியே வந்துள்ளதே ஒற்றரே…

ஆமாம் தலைவா…அனைத்தையும் விட முக்கியமானது ஓய்வு பெறுவதற்கு ஆணை வழங்குவதில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துள்ளார். குறிப்பாக, கூடுதல் இயக்குநர் ஒருவர் ஓய்வு பெறுவதில் இருந்த சிக்கலை சரிசெய்ததை வானளாவ புகழ்ந்தனர் தலைமை அலுவகத்தில் பணிபுரியும் அதிகாரிகள்.

மிக சிறப்பான தகவல் ஒற்றரே..

ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களோடு நாமும் வாழ்த்துவோம். 2023ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பதவி ஏற்று இன்றுடன் இரண்டாம் ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் பா.பொன்னையா இஆப அவர்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டடத்தில் மகளிர் குழு தலையீடு