ஆணையர்
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக எனக் கூறி இடமாறுதல் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக வெளியாகி உள்ள சுற்றறிக்கையில், மாவட்ட தலைமைக்கு தெரியாமல் இடைப்பட்ட காலத்தில் எந்த இடமாறுதலும் செய்யக் கூடாது என அனைத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போலவே,அனைத்து மாவட்டங்களிலும் உத்தரவு பிறப்பித்து ஆணையரின் ஆணையை முழுமையாக நிறைவேற்றி, ஊராட்சி செயலாளர்களை நிம்மதியாக பணி செய்ய வழிவகை செய்யவேண்டும்.
ஆணையரின் உத்தரவிற்கு முழு வடிவம் தந்துள்ள பெரம்பலூர் மாவட்ட ஊரகவளர்ச்சி அதிகாரிகளுக்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கு ராயல் சல்யூட்.