ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை

வழக்கமான கோரிக்கையா ஒற்றரே…

கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் தலைவா…

இந்த ஒற்றை கோரிக்கை தானா ஒற்றரே…

பல கோரிக்கைகளுக்கு பலகாலமாகவே  போராடி வருகின்றனர்.ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பது, தேர்வுநிலை,சிறப்பு நிலை என பல கோரிக்கைகள் தலைவா…

ஒரு சில கோரிக்கையாவது நிறைவேறுமா ஒற்றரே…

கவுன்சிலிங் உடன் இடமாறுதல் என்ற ஆணையரின் உத்தரவை மீறும் வகையில் பிடிஓ தொடங்கி திட்ட இயக்குநர் வரை செயல்படுகின்றனர்.நிர்வாக காரணத்திற்கு என காரணத்தை குறிப்பிட்டு தங்களுக்கு வேண்டபட்டவர்களுக்கு தனியாக உத்தரவு போடுவது தொடர்கதையாகி வருகிறதாம் தலைவா…

அந்த செயல் நடைபெறுவதற்கு தூண்டுவதும் சில ஊராட்சி செயலாளர்கள் தானே ஒற்றரே..

அது உண்மைதான தலைவா…வருமானம் அதிகம் உள்ள ஊராட்சிகளுக்கு இடமாறுதல் செய்வதற்காக அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள் வரை இனிப்பான கவனிப்பு நடத்துவதும் சில ஊராட்சி செயலாளர்தான்.

இடமாறுதல் விடயத்தில் தங்களுக்குள் ஒத்த கருத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் வரவேண்டும்.அதுதான் சரியாக இருக்கும் ஒற்றரே.

தலைவா… அனைத்து கோரிக்கைகளுக்கும் அவர்கள் முழுமையாக நம்புவது ஆணையரை மட்டுமே.தங்கள் ஆணையர் நகராட்சி துறையில் பணியாற்றிய போதும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் பல துறை பணியாளர்களுக்கு பெற்ற தந்த அரசாணைகள் அதிகம்.சொந்த துறை ஊழியர்களான எங்களின் கோரிக்கைளை நிச்சயம்  நிறைவேற்றுவார் என ஊராட்சி செயலாளர்கள் நம்பிக்கை உடன் இருக்கின்றனர் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஆலங்குடி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!