ஆணையருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை கடிதம்

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

சென்னை

பெறுநர்
மதிப்பிற்குரிய
ஆணையர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை,
பனகல் மாளிகை,
சென்னை.

மதிப்பிற்குரிய அய்யா,

பொருள்: ஊரக வளர்ச்சி அலகு- பணி மேற்பார்வையாளர்கள்- நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் வேலை – அதனால் ஏற்படும் பிரச்சனைகள் – உரிய பணியிடமாற்றம் வழங்கிட வேண்டி. ……

மதுரை ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர்கள் மிக நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால் அதாவது 5 வருடங்கள் மற்றும் 4 வருடங்களும் மேலாக வேலை பார்த்து வருவதால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள்,
பல்வேறு இன்னல்கள், உள்ளுர் களத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகள். மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது, குடும்ப சூழ்நிலை, உடல்நிலை பாதிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனை காரணமாக அவதியுற்று வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மக்களிடம் நேரடி தொடர்புடன் பணியாற்றும் இந்த அலுவலர்களை விதிமுறையின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்க்கும் பணியிடத்தினை மாறுதல் செய்திட வேண்டும் என்பதனை கவனத்திற்கு கொண்டு வந்த பிறகும் நடவடிக்கை இல்லாமல் இருப்பதை தங்களின் உடனடி பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

மதுரை மாவட்ட பணிமேற்பார்வையாளர்கள் மனவேதனைகளை களைந்திடும் வகையில் அன்னாரது நலன் கருதி, உரிய பணியிட மாற்றம் வழங்கி சுமுகமான பணிச்சூழலை உருவாக்கித்தந்திட கனிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

Also Read  புல்கட்டை ஊராட்சி - மதுரை மாவட்டம்

கனிவுடன்,
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.

நகல்
1.மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மதுரை மாவட்டம்.
3.உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின்
நேர்முக உதவியாளர்
(வளர்ச்சி) மதுரை மாவட்டம்.