ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்

நாகப்பட்டினம்

ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன மென்பொருள் அலுவலத்தை தனது ஊராட்சியில் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவருக்கு நமது செய்தி இணைய தளம் சார்பாக வாழ்த்துக்கள்.

ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு தொடர் முயற்சிகளுக்கு பின்பு கடந்த ஜனவரி மாதம் ZOHO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உயர்திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களை சந்தித்தேன். நமது பிரதாபராமபுரம் கிராம ஊராட்சி செயல்பாடுகளை பொறுமையாக கேட்டறிந்த ஐயா அவர்கள், நீண்ட உரையாடலுக்கு பின்பு தங்கள் கிராம ஊராட்சியின் முயற்சிகளுக்கு நிறுவனத்தின் சார்பாக தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவதென உறுதியளித்தார்கள் .
மேலும் கிராம பொருளாதாரமே தேசத்தின் பொருளாதாரம் என்பதை அழகாக எடுத்துரைத்தார். மேலும் எங்கள் கிராம ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நிறுவனங்களை முதலீடு செய்யும் நோக்கில் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன் எனவும், குறிப்பாக நெசவு மற்றும் மென்பொருள் நிறுவனங்களை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன் .எங்கள் பகுதியில் முதலீடு செய்வதன் மூலம் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை தேடி பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் தவிர்க்கப்படும் என்பதையும் எடுத்துரைத்தேன். கண்டிப்பாக ZoHO நிறுவனம் மூலமாக முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நெசவு பூங்கா அமைப்பதற்கு நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே தேமங்கலம் ஊராட்சியிலும் மற்றும் மென்பொருள் நிறுவனம் அமைப்பதற்கு பிரதாபராமபுரம் ஊராட்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தேமங்கலம் ஊராட்சியில் நெசவு பூங்கா அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை போல ZOHO நிறுவனத்தின் வருகையால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. எங்களது முயற்சிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிவரும் மதிப்பிற்குரிய தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும் ஐயா திரு சி பி ஆனந்த் அவர்களுக்கும் ,ஐயா பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கும் எங்களது கிராம ஊராட்சியின் சார்பாகவும், எங்கள் மாவட்டத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read  வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் - ஒற்றர் ஓலை