நகரமயமாக்கல்
தமிழ்நாட்டில் இதுவரை இருந்த 12525 ஊராட்சிகள் நகரமயமாக்கலால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12ஆயிரத்தும் கீழே சென்றுவிட்டது.
தமிழக அரசு இன்று01-01-2025) வெளியிட்டுள்ள அரசாணையில் 48 சதவீதமாக இருந்த நகர் பகுதி மேலும் அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளனர். மேலும் புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளால் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய முடியாது. பேரூராட்சி,நகராட்சியாக மாறினால் மட்டுமே அனைத்தும் வசதிகளும் செய்துதர முடியுமாம். தமிழக அரசு கூறி உள்ள தகவலை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.
அப்படியெனில், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளாக மாற்றிவிடும் பணிகளை செய்யலாம். ஊரக வளர்ச்சித்துறையை நகராட்சி நிர்வாகத் துறையோடு இணைத்து விடலாம்.
அனைத்து விவசாய நிலங்களும் நகரமயமாதலால் அழிந்து போகும் அபாயம் உள்ளது.
தனித்தனி மாநிலமாக இருந்தால் வளர்ச்சி குறைவாக இருக்கிறது,அடிப்படை வசதிகளை செய்துதர முடியவில்லை என கூறி, அனைத்து மாநிலங்களையும் இணைத்து ஒரே இந்தியா என்று மத்திய அரசு கூறும் காலம் விரைவில் வரும்.
அப்போது மாநில அரசுகள் என்ன செய்யும். ஊராட்சிகளை அழிக்கும் பாவத்தின் சம்பளம் மாநிலங்கள் இல்லாத இந்தியா ஆகும்.
ஊராட்சிகளை அழிக்கும் பாவத்தின் சம்பளம்….
































