சிவகங்கையில் ஒன்றிய அலுவலர்கள் மாற்றத்தில் அதிருப்தி – ஒற்றர் ஓலை

ஒற்றர் ஓலை

பிடிஓ க்கள் மாற்றத்தில் அதிருப்தி பற்றி நம்மிடம் ஒற்றர் சொன்ன தகவல்களின் தொகுப்பு.

ஏற்கனவே நம்மிடம் கடந்த முறை ஒற்றர் சொன்னது போலவே அமைச்சர் உதயநிதி ஆய்வின் போது  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மாற்றம் செய்யப்பட்டு மூன்றே மாதங்களே ஆன பிடிஓ க்களுக்கும் மீண்டும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இடமாற்றத்தில் பாதாளம் வரை பாய்ந்ததாக பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி சொல்லி விட்டு மயமாய் மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  மார்ச் 26 - ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்