எங்கே ஒற்றரே…
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது தலைவா…
அவர்கள் எந்த பதவியில் உள்ளவர்கள் ஒற்றரே…
கிளை செயலாளர் தொடங்கி ஒன்றியம், மாவட்டம் வரை வரிசை கட்டி வருகிறார்களாம் தலைவா. ஊராட்சி செயலாளர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்ந்து உதவி இயக்குநர் வரை 10 முதல் 15 சதவீதம் வரை கமிசன் கேட்டு ஆளும்கட்சியினர் மிரட்டுகிறார்களாம்.
எந்தெந்த வேலைகளுக்கு கமிசன் ஒற்றரே…
ஊராட்சியின் முதல் கணக்கில் உள்ள நிதியை பயன்படுத்தி செய்யும் வேலை தொடங்கி, முதல்வரின் சாலை திட்டம் என அனைத்து திட்ட வேலைகளுக்கும் கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை செய்ய முடியுமாம் தலைவா…
எல்லாம் காலக்கொடுமை ஒற்றரே…
வரும் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதற்கு பெரும்காரணமாக இந்த உள்ளாட்சி கமிசன் விவகாரமே இருக்கும் என அறிவாலயத்திற்கு அபாய மணி அடித்து விட்டு மறைந்தார் ஒற்றர்.