ஊராட்சி மன்ற கட்டிடத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம் வருமா…

தற்சார்பு

ஊராட்சிகளின் நீண்ட கால திட்டமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை செயல்படுத்தி, ஊராட்சிகளின் பொது மின்சார செலவுகளை குறைத்திட வேண்டும்.

ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளின் அடிப்படையான நிதி தேவைக்கு கூட மத்திய,மாநில அரசுகளை எதிர்பார்த்து இருக்கவேண்டிய நிலை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் உள்ள 9 மாவட்டங்களில் முதலில் செயல்படுத்த தொடங்கவேண்டும். ஊராட்சி பிரதிநிதிகள் எடுக்கும் முடிவே இறுதியானது.

தனி அலுவலர் ஆளுமையில் உள்ள மாவட்டங்களில் நிதிநிலை சிறப்பாக இருக்கும் ஊராட்சிகளில் முதலில் நடைமுறை படுத்தலாம். இந்த முடிவை ஊரக வளர்ச்சித் துறையின் மாவட்ட அதிகாரிகளே எடுக்கலாம்.

இந்த மாற்றம் நிகழ வேண்டும். இதனை முதலில் ஆரம்பிக்கப் போகும் ஊராட்சி எது?

Also Read  உதவி இயக்குநர்கள் அதிகாரம் - தனி அலுவலர் காலம் போல தொடருமா?