375 ஊராட்சிகள்
அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் 375 ஊராட்சிகள் அருகில் உள்ள நகரமைப்புகளோடு இணைக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு 375 ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படும் என தெரித்திருந்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர், 120 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மீதம் உள்ள ஊராட்சிகளில் மக்கள் எதிர்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.
தனி நிதி ஒதுக்கீடு
மானிய கோரிக்கையின் போது, 20 அறிவிப்புகளை அமைச்சர் அவர்கள் வெளியிட்டார். அதில்,13வது அறிவிப்பாக நகரப்புறங்களை ஒட்டி அமைந்துள்ள 690 ஊராட்சிகளுக்கு 69 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தான் நமது செய்தி இணைய தளத்தில் தொடர்ந்து எழுதி வந்தோம். ஊராட்சிகளை இணைப்பதற்கு பதிலாக, தரம் உயர்த்துவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என செய்தியாக தொடர்ந்து வெளியிட்டோம்.
ஊராட்சிகளை காப்பாற்றுவதற்கான மிக சிறந்த அறிவிப்பாக இது உள்ளது. நகரமைப்புகளுக்கு இணையாக குடிநீர்,சாலை,சுகாதார வசதிகளை செய்தாலே போதும். அருகில் உள்ள நரங்களோடு இணைக்க வேண்டிய அவசியம் எந்நாளும் வராது.
அப்படிப்பட்ட 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும்.தூய்மை பணியாளர்கள் உட்பட அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கையையும் தேவைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.
அமைச்சர்,முதன்மை செயலாளர்,ஆணையர் மூவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சித்துறைக்கும் மக்களின் சார்பாக நன்றிகள். இனியும் இதுபோன்ற சிறந்த முன்னெடுப்புகள் தொடர வேண்டும்.