மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் – கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும்.

ஊராட்சி செயலாளர்கள்

தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊராட்சி தலைவர் பணியில் அமர்த்தி வந்தனர்.

பத்தாம் வகுப்பு படிப்பு தகுதியாக உள்ளது. இந்த கணிணி காலத்திற்கு ஏற்ப தங்களின் பணிமுறையை தகுதி உயர்த்தி கொள்ள சொற்பமான ஊராட்சி செயலாளர்களே உள்ளனர். கணிணி கையாள்வதற்கு தெரியாத ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கையே அதிகம்.

ஆரம்ப கட்டத்தை விட, தற்போதைய நிலையில் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு போன்றவற்றில் போராடி தன்னிறைவை பெற்று உள்ளனர்.

இடமாறுதல்

ஒரு ஊராட்சி செயலாளர் ஒரே ஊராட்சியில் மாறுதல் இல்லாமலே பணியாற்றி வருகின்றனர். அதிலும், பொருளாதார நிலையில் மேம்பட்டு உள்ள ஊராட்சியில் பணி புரிபவர்கள் இடமாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

கவுன்சிலிங் உடன் மூன்று ஆண்டுக்கொருமுறை இடமாறுதல் என்பதற்கு பல்வேறு காலங்களில்,பல போரட்டங்கள் நடைபெற்றன. ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக பா.பொன்னையா இஆப வந்த பிறகு இடமாறுதல் உட்பட பல மாற்றங்களுக்கான ஆணை வந்துள்ளது.

நம்மிடம் பேசிய அனைத்து சங்க நிர்வாகிகளும் ஆணையரின் செயலை உளமாற பாரட்டினர். ஆணையர் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாகவும், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பணிந்தும் இடமாறுதல் உத்தரவை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை.

Also Read  ஊராட்சி தலைவரின் மகள் யோகாவில் சாதனை வெற்றி

மூன்றாண்டுக்கொருமுறை கட்டாயம் இடமாற்றம் செய்திடல் வேண்டும். அதற்கு தடையாக அரசியல்,பணம்,சங்கம்,உறவு என எதுவந்தாலும் அதனை உடைத்து ஆணையரின் ஆணையை நடைமுறை படுத்திடவேண்டும்.

ஆணையரின் உத்தரவை நிறைவேற்றாத வட்டார வளர்ச்சி அலுவலரகளை கண்காணித்து இடமாறுதல் செயல்படுத்த மாவட்ட அதிகாரிகள் தொடங்கி,மாநில அதிகாரிகள் வரை உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் ஆணையர் இடும் உத்தரவை அனைத்து நிலை பணியாளர்களும் உடனடியாக நடைமுறை படுத்தவேண்டும்.

இதுவரை இடமாறுதல் செய்யாத ஒன்றியங்களின் விவரங்களை தொடர்ந்து செய்தியாக வெளியிடுவதற்கு முயற்சி செய்வோம்.