ஊரக வளர்ச்சித்துறையில் இடாறுதல் பற்றி மற்றொரு தகவல் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது தலைவா…
ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் பற்றி ஆணையர் அவர்கள் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளாரே ஒற்றரே….
இதுவேற விசயம்…சில மாவட்டங்களில் மூன்றாண்டுகளை கடந்தும் திட்ட இயக்குநராக பணியாற்றி வருகிறார்களாம். அவர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்குள் உரையாடல் தொடர்கிறதாம் தலைவா…
கூடுதல் தகவல் ஏதாவது உண்டா ஒற்றரே..
உண்டு தலைவா…பல திட்ட இயக்குநர்கள் மகளிர் திட்டம் , பயிற்சி நிறுவனம் போன்ற பதவிகளில் ஒட்டுமொத்த பணி காலத்தையும் கழித்து வருகிறார்களாம். அனைத்து அதிகாரிகளும் அதிகாரமிக்க பதவியில் அமரும் வகையில் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மிகச் சரியான கோரிக்கை தானே ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஆணையர் சரியான முடிவை எடுப்பார் என நம்புகின்றனர் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.