இடமாறுதல் பிரச்சனையும்,வட்டார வளர்ச்சி அலுவலர்களும் – ஒற்றர் ஓலை

அனுமார் வால் போல பிரச்சனை நீள்கிறதே ஒற்றரே…

ஆமாம் தலைவா…மூன்றாண்டுக்கு ஒருமுறை என்ற ஆணையரின் ஆணையை காற்றில் பறக்கவிடும் செயலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமா ஒற்றரே…

ஆமாம் தலைவா…அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் மிக அதிகமாக உள்ளது.ஆளும்கட்சியினரின் நெருக்கடிக்கு பணிய வேண்டிய நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றியத்தில் நடந்த இடமாறுதலை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்.

இதற்கு என்ன தான் தீர்வு ஒற்றரே….

மூன்றாண்டுக்கு ஒரு முறைதான் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் செய்யவேண்டும். அவசியமாக ஒரு ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்தே ஆகவேண்டுமெனில், இறுதி அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கவேண்டும். அப்போது தான் ஆளும்கட்சியினரின் தலையீடு மட்டுப்படும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?