தூத்துக்குடி மாவட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும்.

வறுமை ஒழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உடையாண்டியை சேர்ந்த பா.நட்சத்திரம் என்பவர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் பத்து வருடமாக எந்த பயனும் கிடைக்காததால் உடனே நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று 20.7.2024 ல் மனு கொடுத்தார்.

ஆனால் மனுதாரர் பயன் பெற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர்(கி. ஊ) இவர்தான் இந்த ஊராட்சிக்கு தனி அலுவலராக உள்ளார். மேலும் வறுமை ஒழிப்பு சங்கத்துக்கு பொறுப்பான அதிகாரி. மனுதாரர் தான் வரிய நிலையில் வாழ்வதாகவும் மேலும் தன் வீட்டுக்கு மின்சாரம் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நலிந்தோர் நல திட்டத்தில் ரூபாய் 25 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் 60 வயதிற்கு மேற்பட்டவர் என்பதால் இவரை முதியோர் குழுவில் சேர்த்து இவருக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை.

இவர் தலித் என்பதால் முதியோர் குழுவில் சேர்ப்பதற்கு எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆதலால் தலித் பெண்ணுக்கு தமிழக முதல்வர் தலையிட்டால் தான் நியாயம் கிடைக்கும்.

Also Read  சமூக இடைவெளி கடைபிடிக்கும் மம்சாபுரம் ஊராட்சி

செய்தி:- முருகன்