தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

 திருச்சி

சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

துனை தலைமை ஒருங்கினைப்பாளர்கோவை ரங்கராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், வாசுதேவன்,
செல்லப்பான்டி, பத்மநாபன்,குமரேசன்,வாசுதேவன், சாஜீ,மணிராஜ், கிருஷ்ணன், செந்தில் குமார்,
ராஜ்குமார்,
ஆதிமுலம்,
முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கீழ்க்கண்ட கோரிக்கைகளை
செய்து தர
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி
செயலாளர்களை SIRபணியில் ஈடுபடுத்க் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

கோரிக்கைகள்

1.கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

2.கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம்
ரூ10000 வழங்க வேண்டும்.

3.கிராம ஊராட்சியில் பணியாற்றும் VPRC,PLF கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து மாததச்சம்பபளம்
ரூ10000வழங்கவேண்டும்.

4.கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்,ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கவேண்டும்.

5.கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

6.தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும்மற்றும் பெரிய கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சி களை உருவாக்கவேண்டும்

Also Read  நாலுகோட்டை ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்

7.ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அணைத்து ஒன்றியங்களிலும் புதியதாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட கணிணி உதவியாளர்
களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

9. முழு சுகாதார திட்டம் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 19 ல் சென்னையில்
50000 பேர் கலந்துகொள்ளும் பேரனி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்.