ஊரக வளர்ச்சித்துறை
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் குடிநீருக்காக குறிப்பிடத்தக்க வகையில் நிரந்தரமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில,மத்திய அரசுகளின் நிதிகளை மட்டுமே நம்பி உள்ளன பெரும்பான்மையான ஊராட்சிகள். ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில நிதி வந்தால் மட்டுமே ஊழியம் கொடுக்கும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில், மின்சார கட்டண செலவை எந்த அளவிற்கு மிச்சப்படுத்த முடியும் என முயற்சித்து பார்க்கவேண்டும்.
ஊராட்சி அலுவலகம்
இதன் முதல்கட்ட முயற்சியாக ஊராட்சி அலுவலக கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.
முதல் கணக்கில் போதிய நிதி உள்ள ஊராட்சிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மூவாயிரம் ரூபாய் ஊராட்சி அலுவலகத்திற்கு மட்டுமே மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றன.
ஒட்டுமொத்த ஊராட்சிகளுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்களும்,தவறுகளும் நடக்கலாம்.அதனால், முதல் கணக்கில் நிதி ஆதாரம் உள்ள ஊராட்சிகள் தனித்தனியே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையே மின்சார பேருந்துக்கு படிப்படியாக வெற்றிகரமாக மாறி வருகிறது.
திட்ட இயக்குநர்கள்
ஊரக வளர்ச்சி துறைக்கு இப்போது நடைபெற்று வருவது பொற்காலம் ஆகும்.ஆம்,துறையின் முதன்மை செயலாளரும்,கூடுதல் தலைமை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி இஆப, மற்றும் ஆணையர் பா.பொன்னையா இஆப, இருவரும் இணைந்து பல பயனுள்ள மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்.
இந்த திட்டத்தை நடைமுறை படுத்திட திட்ட இயக்குநர் உத்தரவு இட்டாலே போதும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தலைவரான மாவட்ட ஆட்சியரிடம் திட்ட அனுமதியை பெற்று நடைமுறை படுத்த வேண்டும்.
அதன்பிறகு, ஊராட்சிகளின் அனைத்து மின்சார தேவைகளுக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தலாம்.
செய்வார்களா…திட்ட இயக்குநர்கள்…
இணைப்பு:- வரும் 7 மற்றும் 8ம் தேதியில் சென்னையில் நடக்கும் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் விவாதித்து இதனை நடைமுறை படுத்த முயற்சி நடக்கும் என நம்புவோம்.