யாருக்கு ஒற்றரே…சம்பள பிரச்சனை
ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா..
என்ன ஆனது ஒற்றரே…
வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.இதுபற்றி ஆணையருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளதாம் தலைவா..
இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன ஒற்றரே…
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடிய 7ம் எண் கணக்கில் மூன்று மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளத்திற்கான பணத்தை வரவு வைத்து விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் தலைவா. ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் அவர்கள் உறுதியாக நல்ல தீர்வு காண்பார் என சொல்லி விட்டு மறைந்தார் ஒற்றர்.