என்ன விசயம் ஒற்றரே…
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தேதிகளில் சம்பளம் வழங்கி வருகிறார்களாம் தலைவா..
என்ன காரணம் ஒற்றரே…
ஊராட்சி செயலாளர் தொடங்கி தூய்மை காவலர்கள் வரை சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவது இல்லை. அந்தந்த பிடிஓ,மண்டல துணை பிடிஓ இணைந்து ஓடிபி பதிவிட வேண்டுமாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை…
சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சொந்த வேலை வந்துவிட்டால் சம்பளம் போடுவது இல்லலையாம். அவர்களின் சம்பளம் மாதத்தின் கடைசி நாளில் கட்டாயம் வரவேண்டும். இல்லை என்றால் மாநில அரசை திட்டி தீர்த்துவிடுவார்களாம் தலைவா…
அவர்களுக்கு வந்தா ரத்தமா ஒற்றரே…
அதே தான் தலைவா…மாதத்தின் முதல்நாள் விடுமுறை இல்லை என்றால் அன்றே ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை வழங்கிட வழிமுறை செய்யவேண்டும். இருவரின் ஓடிபியை மாற்றி அந்தந்த மண்டல துணை பிடிஓ விடம் மட்டும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
சரியாக சொன்னீர் ஒற்றரே…
காலங்கள் பாராது கடுமையான உழைப்பை கொடுக்கும் ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் மாதத்தின் முதல் நாளே சம்பளம் கிடைத்திட வழிமுறை வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.