திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்

ஆகஸ்ட் 23

16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி உதவியாளர்கள், மக்கள் நல் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் இணைந்து திருச்சி வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

மாவட்டம் வாரியாக சுமார் ஆயிரம் பேருக்கு அதிகமாகவும், திருச்சிக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரம் பேர்களுக்கும் அதிகமாக வர உள்ளதாக தெரிகிறது.

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் திருச்சிக்கு வருவார்கள் என தெரிகிறது.

அவர்களின் கோரிக்கை வெற்றி பெற நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  பாக்குவெட்டி ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்