சாதனை செய்தியா ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சி இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அப்போதுதான், துறைரீதியான பதவி உயர்வு பாதிக்கப்படாது என்பது நீண்ட நாள் கோரிக்கை.
வந்துள்ள இடமாறுதல் அரசாணையில் தீர்வு கிடைத்துள்ளதா ஒற்றரே…
கிடைத்துள்ளது தலைவா… மதுரை,புதுக்கோட்டை,ஈரோடு என மூன்று மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியருக்கு பதிலாக திட்ட இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காலியாக உள்ள தர்மபுரி மாவட்டத்திற்கும் திட்ட இயக்குநர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அருமையான தகவல் ஒற்றரே..
துறையின் முதன்மை செயலாளரும் ஆணையரும் இணைந்து செய்த பெரிய செயல் இது என்று என்னிடம் உதவி இயக்குநர்கள் கூறினர் தலைவா..
அவர்களின் சாதனை பயணம் தொடர வேண்டும் ஒற்றரே…
சாதனையை பற்றி பேசும்போது வேதனையான ஒரு செய்தி தலைவா. கோயம்புத்தூர் உதவி இயக்குநர் கொடுத்த டார்ச்சரால் ஊராட்சி செயலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
யார் மீது தவறு என்ற உண்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒற்றரே..
சென்னை ஆய்வு கூட்டத்திற்கு விமானத்தில் ஒரே உதவி இயக்குநர் இவரென ஏற்கனவே நாம் பேசி இருக்கிறோம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.