ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ – ஒற்றர் ஓலை

தேவகோட்டை பாஸ்கர் செய்தி முடிவுக்கு வராதா ஒற்றரே..

பணி இடைநீக்கத்தையே தூள்தூள் ஆக்கியவன் நான். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறாராம்.

அவர்மீதான புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக சொல்கிறார்களே ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க ஏதோ ஒன்று தடையாக உள்ளது.மிகப் பெரிய தவறு ஒன்று நடந்த பிறகுதான் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் போல….

கிடைத்த தகவலை உறுதியாகவும், இறுதியாகவும் சொல்லிவிட்டோம். இனி, மேலே இருப்பவரின் கையில் தான் முடிவு உள்ளது ஒற்றரே.

கடந்தமுறை  ஊராட்சி செயலாளர்களின் ஓய்வூதியம் பற்றி பேசினோம் அல்லவா.நகராட்சி துறையில் பணியாற்றிய போது  3ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தவர் தான் தற்போதைய ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர். அதனால், தங்களுக்கும் விடிவுகாலம் பிறக்குமென ஊராட்சி செயலாளர்கள் நம்புகிறார்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கல்யாணபுரம் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்