என்ன செய்தி ஒற்றரே..
நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே…
பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகளின் வங்கி கணக்கு எண் மாற்றி மாற்றி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சிக்கு வரவேண்டிய பணம் மற்றொரு ஊராட்சிக்கு செல்கிறது தலைவா…
இதற்கான நடவடிக்கையை அந்தந்த மாவட்டங்களில் எடுக்க முடியாதா ஒற்றரே…
அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லையாம். மாவட்டத்தின் சார்பாக தலைமை அலுவலகத்திற்கு புகாரை அனுப்பி பல மாதங்கள் கடந்த பிறகும் நடவடிக்கை இல்லை என சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் புலம்புகிறார்களாம் தலைவா…
எந்த மாவட்டங்கள் ஒற்றரே…
பல மாவட்டங்களில் இதே நிலை தான். நமக்கு நன்கு அறிந்து சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் இந்த சிக்கல் உள்ளது. நடவடிக்கை பற்றி தொடர்ந்து கண்காணிப்போம் என கூறி மறைந்தார் ஒற்றர்.