ஊராட்சி செயலர் பணி நியமனம்-முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கா? தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் சொல்வது என்ன?

ஜான்போஸ்கோ பிரகாஷ்

விழிப்புணர்வு பதிவு

ஊராட்சி செயலர்கள் புதிய பணிநியமனம் தொடர்பாக அப்பணியை பெற்றுத்தருகிறோம் இவ்வளவு பணம் தாருங்கள்,அவ்வளவு பணம் தாருங்கள் என புரோக்கர்கள் அலைவதாக செய்திகள் வருகின்றன.

உண்மை நிலை என்ன?

ஒரு பணியிடத்துக்கு 05 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்..அதாவது நேர்காணல் அழைப்பு வரும்வரை எல்லாமே கணினி வழி தேர்வுதான்..10 ம் வகுப்பு மதிப்பெண்தான் அடிப்படை..கணினி மென்பொருளில் ஒரு சில பெயர்களை மட்டும்,அல்லது ஏதோ ஒரு மதிப்பெண் எடுத்துள்ளவர்களை மட்டும் நேர்காணலுக்கு அழைக்க வைக்க இயலாது என்பதனை அறிக*

உதாரணமாக பொதுபிரிவுக்கு 10 எண்ணிக்கை இருக்கிறது எனில் 50 பேர் நேர்காணலுக்கு அழைக்க கணினிதான் பட்டியல் தரும்(1:5)..அதாவது பொதுப்பிரிவு மனுதாரரில் மேலிருந்து(500 மார்க்)டாப் மார்க் எடுத்த 50 பேர்..தவிர நேர்காணலுக்கு அழைக்கப்படும் நபர்களின் மதிப்பெண்ணை அனைவருமே பார்வையிட முடியும்..உள்ளீடு முறைகேட்டுக்கு அணு அளவுகூட வாய்ப்பில்லை*

இதில் எப்படி முறைகேடு செய்வது?சாத்தியமில்லை..தவிர நேர்காணலுக்கு அலைக்கப்படும் அனைவரும் தரமானவர்களாக இருப்பார்கள்..ஆட்சியர் நேர்காணல் நடத்துவார்..ஆட்சியர்களுக்கு எவரும் பணம் தந்து முறைகேடு செய்ய இயலாது.

எனவே இப்பணியிடம் தொடர்பாக புரோக்கர்கள் எவரேனும் நான் வாங்கிக்கொடுத்துவிடுவேன் என விண்ணப்பதாரர்களை நாடினால் அதனை தவிர்த்துவிட்டு பணத்தை காத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Also Read  ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் - ஆணையர் ஆணை

அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்