முழுமையாக வரி வசூல் செய்யாத ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே அதிரடி செய்தியோடு வந்துள்ளீர்.

ஆமாம் தலைவா…சேலம் மாவட்டம் காடையம்பட்டி ஒன்றியத்தில் மிக குறைவான அளவே வரி வசூல் செய்த காரணத்தால் 5 ஊராட்சி செயலாளர்களை பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதீத முடிவாக அல்லவா இருக்கிறது ஒற்றரே…

ஆமாம் தலைவா…வரி வசூலில் உள்ள அடிப்படை சிக்கலை சரி செய்யாத அதிகாரிகள், கடைநிலை ஊழியர்களை பழிகடாவாக ஆக்கி உள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது.

வரி வசூலில் என்ன சிக்கல் ஒற்றரே…

வரி கட்டாத நபர்களை காலில் விழாத குறையாக கெஞ்சத்தான் முடிவும். கட்டாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே உள்ளது. நேரடியாக வசூல் செய்ய சென்றால்,ஆன்லைனில் கட்டிவிடுகிறேன் என தட்டிக்கழிக்கிறார்கள். ஆனால், ஆன்லைனில் வரி கட்டுவதற்கான இறுதி நாளை இதுவரை ஏற்பட்டுத்தவில்லை.

அப்படியெனில் பாவம் ஊராட்சி செயலாளர்கள்.

ஆமாம் தலைவா… ஆன்லைனை சரி செய்ய துரும்பைக் கூட எடுத்துபோடாத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலாளரை தண்டிப்பது தவறான செயல் ஆகும். இதற்கு துறையின் உயர் அதிகாரிகள் தக்க வழிகாட்டுதலை செய்ய வேண்டும். பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தனி அலுவலர் காலம் - பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்